திருவிடைமருதூரில் நூல் வெளியீட்டு விழா

திருவிடைமருதூரில் 27 நட்சத்திரங்களுக்குரிய கோயில்களும், தெய்வமும் எனும் நூல் வெளியீட்டு விழா நடந்தது.

Update: 2024-04-10 15:00 GMT

திருவிடைமருதூரில் 27 நட்சத்திரங்களுக்குரிய கோயில்களும், தெய்வமும் எனும் நூல் வெளியீட்டு விழா நடந்தது.


திருவிடைமருதூரில் 27 நட்சத்திரங்களுக்குரிய கோயில்களும், தெய்வமும் எனும் நூல் வெளியீட்டு விழா நடந்தது. திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவில் 27 நட்சத்திரங்களுக்கென்று தனி சன்னதி அமையப்பெற்ற சிறப்பான தலமாகும். கோவில் வாசலில் சென்னை நாராயணன் எழுதிய 27 நட்சத்திரங்களுக்குரிய கோவில்களும், தெய்வமும் எனும் நூல் வெளியிடப்பட்டது.

முதல் நட்சத்திரமான அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்த பிரபல கர்நாடக இசை கலைஞர் அஸ்வின் வெளியிட, அதனை நிறைவு நட்சத்திரமான ரேவதியில் பிறந்த வேதாரண்யம் அருகே உள்ள பிச்சைக்கட்டளை பள்ளி ஆசிரியை ரேவதி பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில் சென்னை அட்சயா அறக்கட்டளை சமூக சேவகி சரஸ்வதி, ஆன்மீகவாதி மரகதவல்லி, திருச்சி வானொலி உதவி இயக்குனர் செந்தில் நாயகி , சென்னை வானொலி முன்னாள் அறிவிப்பாளர் ஜெயராமன் மற்றும் வானொலியை சேர்ந்த தாமஸ் பாஸ்கர், ஜெயஸ்ரீ, மாலா, கோவில் பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து சாரதா மஹாலில் நடந்த நிகழ்ச்சியில் நிறைவுறையாற்றிய நூலாசிரியர் பி கே நாராயணன் , பக்தர்கள் தமது பிரச்சினைகள் தீர, ராசியின் அதிபதிகளை மட்டுமே வணங்குகின்றனர். ஆனால் அவர்கள் சார்ந்த ஜென்ம நட்சத்திரம்தான் நிரந்தர தீர்வைக் கொடுக்கும். ஆகையால், ராசி நாதனை விட ஜென்ம நட்சத்திர அதிபதியே வலிமையானவர் என்று விளக்கிப் பேசினார்.

Tags:    

Similar News