பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்

அனக்காவூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

Update: 2023-12-09 11:32 GMT

அனக்காவூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

செய்யாறு அருகே அனக்காவூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட புரிசை, அரசூர், கீழ்கொளத்தூர்,அத்திகுளம் உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் ஓன்றிய செயலாளர்கள் குணசீலன், துரை ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக வடக்கு மாவட்ட செயலாளர் தூசி கே மோகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பாளர்கள் டி.பி.துரை, விமலா மகேந்திரன்,ராணி பெருமாள், ஆலத்தூர் சுப்பிராயன், பாலன் முனுசாமி,அருண்குமார், அரவிந்த், கன்னியப்பன் மற்றும் நகர செயலாளர் வெங்கடேசன் ஓன்றிய செயலாளர்கள், அரங்கநாதன், மகேந்திரன், ராமநாதன் மற்றும் அரசூர் தலைவர் வெங்கடேசன், சங்கர், பொன்னுரங்கம் , ரவி, பாராசூர் பெருமாள்,ஜனார்த்தனன், தணிகாசலம், சுரேஷ், மற்றும் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News