தேனியில் அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

தேனியில் அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-11-30 12:22 GMT

அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தேனி அல்லிநகரத்தில் உள்ள தனியார் மகாலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் தேனி கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளுக்கான பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் முருக் கோடை ராமர் தலைமையிலும் தேனி நகர செயலாளர் கிருஷ்ணக்குமார் முன்னிலையிலும் நடைபெற்றது. இந்த பூக்கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினரும் அதிமுகவின் அமைப்பு செயலாளருமான A.K செல்வராஜ் பங்கேற்று பூத் கமிட்டி அமைப்பது குறித்தும், அதிமுக நிர்வாகிகள் எவ்வாறு செயல்படுவதினை குறித்தும் சிறப்பு உரை நிகழ்த்தினர் .

மேலும் தற்பொழுது தமிழகத்தில் ஆளும் திமுக அரசானது சொத்துவரி , குடிநீர் வரி , மின்சாரக் கட்டணம் உயர்வு உள்ளிட்ட பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசியமான பொருட்களின் விலை உயர்வினால் பொது மக்கள் கடும் அதிப்தி உண்டாகி உள்ளது என்றும் ,தேனி பாராளுமன்ற உறுப்பினர் தேர்தலில் அதிமுக நிர்வாகிகள் பொதுமக்களிடையே நற்பெயர் எடுத்து பணியாற்ற வேண்டும் என்றும் கூறினர் .

இந்த நிகழ்ச்சியின் நன்றி உரையினை பெரியகுளம் ஒன்றிய பொருப்பாளர் அன்னப்பராஜும் , தேனி நகர துணை செயலாளர் சுந்தரபாண்டி நன்றி உரையினையும் நிகழ்த்தினார்கள்

Tags:    

Similar News