இருவருக்கு தலா ரூ.10ஆயிரம் அபராதம்
முயலை வேட்டையாட முயன்ற இருவருக்கு தலா ரூ.10ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது;
By : King 24x7 Angel
Update: 2024-02-05 10:28 GMT
இருவருக்கு தலா ரூ.10ஆயிரம் அபராதம்
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அடுத்த தேவிநாயக்கன்பட்டி சுக்காம்பட்டி சாலையில் சனிக்கிழமை நள்ளிரவு சிலா் முயல் வேட்டைக்குச் செல்வதாக வனப் பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற வனத் துறையினா், முயல் வேட்டையாட முயன்ற மலப்பட்டியைச் சேர்ந்த பூசாரி மகன் வேல்முருகன் (24), இதே பகுதியைச் சேர்ந்த பெருமாள் மகன் கருப்பையா (27) ஆகியோா் பிடிபட்டனா்.இருவரும், அய்யலூா் வனச் சரகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்குப் பின் இருவருக்கும் தலா ரூ.10ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.