குப்பை எரித்தபோது வெடித்த பாட்டில் - முதியவர் உயிரிழப்பு
தஞ்சாவூர் அருகே குப்பையை எரிக்கும்போது மருந்து பாட்டில் வெடித்ததில் பலத்த காயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.;
Update: 2024-02-01 03:54 GMT
தஞ்சாவூர் அருகே மாதாகோட்டை வங்கி ஊழியர் காலனி ஒன்பதாவது தெருவைச் சேர்ந்தவர் எம். துரைமாணிக்கம் (60). இவர் போகி பண்டிகையையொட்டி, வீட்டில் இருந்த பழைய பொருள்களை வீட்டு அருகே வைத்து ஜனவரி 12 ஆம் தேதி எரித்துக் கொண்டிருந்தார். அப்போது, அதிலிருந்த மருந்து பாட்டில் வெடித்து சிதறி, துரைமாணிக்கம் மீது விழுந்தது. இதனால், பலத்த காயமடைந்த துரைமாணிக்கம் தஞ்சாவூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் திருச்சியிலுள்ள தனியார் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த துரைமாணிக்கம் திங்கள்கிழமை உயிரிழந்தார். இது குறித்து தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.