சரிந்தது சுரக்காய் விலை

திருப்பூர் காய்கறி மார்க்கெட்டில் சுரக்காய் வரத்து அதிகரித்ததால் விலை சரிந்துள்ளது. விலை சரிவு

Update: 2023-12-13 08:59 GMT

திருப்பூர் காய்கறி மார்க்கெட்டில் சுரக்காய் வரத்து அதிகரித்ததால் விலை சரிந்துள்ளது. விலை சரிவு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருப்பூரில் உள்ள சந்தைக்கு சுரைக்காய் வரத்து அதிகரித்ததன் காரணமாக விலை குறைவாக விற்கப்பட்டது.

திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாய விளைநிலங்களில் விளைவிக்கப்படும் பொருட்கள் திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள தென்னம்பாளையம் சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்படுவது வழக்கம். இங்கு ஏராளமான வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கிச் செல்வது வழக்கம். இந்நிலையில் திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் சுரைக்காயின் வரத்து அதிகரித்திருப்பதன் காரணமாக இன்று சுரக்காய் அதிகளவு விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்தது.

இதன் காரணமாக 15 கிலோ எடையுள்ள சுரைக்காய் பை ஒன்று 250 முதல் 300 ரூபாய் வரை மட்டுமே விற்பனை செய்யப்பட்டது. கடந்த வாரங்களில் 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டதாகவும் வரத்து அதிகரித்ததன் காரணமாக தற்போது விலை குறைந்திருப்பதாக விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News