குத்துச்சண்டை போட்டி
அரியலூரில் மாவட்ட அளவிலான குத்துசண்டை போட்டி நடந்தது.;
Update: 2023-12-25 10:34 GMT
அரியலூரில் மாவட்ட அளவிலான குத்துசண்டை போட்டி நடந்தது.
அரியலூர் மாவட்ட அளவிலான குத்துசண்டை போட்டி அரியலூர் நகரிலுள்ள பழனி மகாலில் நடைப்பெற்றது. இதனை அரியலூர் எம்எல்ஏ சின்னப்பா தொடங்கி வைத்தார். இதனையடுத்து மாணவ, மாணவிகளுக்கென தனிதனியாக போட்டிகள் நடைப்பெற்றது. இதில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 150 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிபடுத்தினர். இதனையடுத்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கபட்டது. இதில் அமைப்பாளர் ராஜேஷ், அரியலூர் மாவட்ட குத்துசண்டை சங்க கெளர தலைவர் சந்திரசேகர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.