பொம்மிடி அருகே மூதாட்டியிடம் தங்கசங்கிலி பறித்த சிறுவன் கைது

வீட்டில் புகுந்து மூதாட்டியின் வாயை அமுக்கி, கழுத்தில் இருந்த, 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துச் சென்ற சிறுவன் கைது.

Update: 2024-03-21 10:50 GMT

காவல்துறை விசாரணை


தர்மபுரி மாவட்டம் பாப்பரப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொம்மிடி அருகே உள்ள கதிரிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜி. இவரது மனைவி முனியம்மாள் இவருக்கு வயது 75 இவர் நேற்று இரவு தனது வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர் வீட்டில் புகுந்து மூதாட்டியின் வாயை அமுக்கி, கழுத்தில் இருந்த, 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துச் சென்றார். இதுகுறித்து பொம்மிடி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது 17 வயது சிறுவன் மூதாட்டியின் கழுத்தில் இருந்து செயினை பறித்து சென்றது தெரியவந்தது. இதனையடுத்து காவலர்கள் சிறுவனை கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.
Tags:    

Similar News