இருசக்கர வாகன மீது கார் மோதல் - சிறுவன் பலி
விருதுநகர் - சிவகாசி சாலையில் இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்தில் 14 வயது சிறுவன் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
மதுரை மாவட்டம், ஆனையூர் பகுதியைச் சார்ந்தவர் குமார் வயது 14 இவர் தனது சித்தப்பா ராஜேந்திரன் என்பவர் வீட்டில் சிவகாசி உப்போடை பகுதியில் கடந்த ஐந்து வருடமாக வசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 14 ஆம் தேதி வீட்டில் இருந்த இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.
அந்த சிறுவன் சென்ற இருசக்கர வாகனம் சிவகாசி சாலையில் ஆனைக்குட்டம் அருகே தனியார் பட்டாசு கடை பகுதியில் சென்று கொண்டிருந்த பொழுது அவருக்கு எதிரே சின்னவாடி பகுதியைச் சேர்ந்த பழனி குமார் என்பவர் ஓட்டி வந்த குமார் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது இதில் காயம் அடைந்த குமார் அருகில் இருப்பவர்கள் உதவியுடன் திருத்தங்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருத்தங்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்த சிறுவன் மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அங்கு அந்த சிறுவர் சிகிச்சை பலனின்றி உயர்ந்ததாக கூறப்படுகிறது.
சித்தப்பா ராஜேந்திரன் நடித்த புகாரின் அடிப்படையில் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.