ஸ்கேட்டிங் விளையாடிக் கொண்டே 19 கனச்சதுர புதிரை அசால்டாக முடித்த சிறுவன்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெள்ளக்கல்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அன்பரசு, 33. பெங்களுரில் ஏர்போர்டில் வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி சுகன்யா, 31. இவர்களுக்கு ஹோசந்த், 8 என்ற மகன் உள்ளார். இவர், பெங்களூரில் உள்ள தனியார் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறார். ஹோசாந்த்க்கு 2 வயதில் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தபோது கீழே விழுந்ததில் இடதுகால் உடைந்துள்ளது. காலில் பிளேட் வைத்துள்ளனர்.
சரியான சில ஆண்டுகளில் அதனை அகற்றிவிட்டனர். இருப்பினும், கால்வலி இருந்துள்ளது. இந்நிலையில், அன்பரசு ஸ்கேட்டிங் உபகரணம் வாங்கிக் கொடுத்துள்ளார். ஆரம்பத்தில் அதனைக் மாட்டிக்கொண்டு, வீட்டின் முன்பகுதியில் விளையாடியுள்ளார். இதில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக யூடியூப்பில் ஸ்கேட்டுங் சம்பந்தமான வீடியோக்களை பார்த்து அதன்படி விளையாடியுள்ளார். அன்பரசு, சுகன்யா இருவருக்கும் கனசதுரங்களில் உள்ள புதிரை விடுவிங்கும் ஆர்வம் இருந்துள்ளது.
இதனை சிறுவயது முதலாகவே ஹோசந்த்க்கும் பயிற்சி கொடுத்துள்ளார். சாதனை முயற்சியாக ஸ்கேட்டிங் விளையாடிக்கொண்டே கனசதுரம் (Rubik’s Cube Solver) புதிரை தீர்க்க வேண்டும் என அன்பரசு கூறியதையடுத்து, அதன்படி ஆர்வத்துடன் பயிற்சி செய்து வந்தார். அதன்படி, பெங்களூரில் கடந்த ஜூலை மாதம், 19 கனச்சதுரங்களை, ஒரு மணி நேரத்தில் செய்து, WORLD WIDE BOOK OF RECORDS ல் இடம்பிடித்தார்.
அதைத் தொடர்ந்து, கடந்த அக்டோபர் 17ம் தேதி தனது சொந்த ஊரான ராசிபுரம் அடுத்த வெள்ளக்கல்பட்டியில் INDIA’S WORLD RECORD உறுப்பினர்களின் முன்னிலையில், ஸ்கேட்டிங் விளையாடிக்கொண்டு, 3 மணி 20 நிமிடத்தில் 410 கனச்சதுர புதிரை தீர்த்து சாதனை படைத்தார். இதன் மூலம், ஏற்கனவே கின்னஸ் சாதனை படைத்த இளநவீன், 18 என்பவரின் சாதனையை முறியடித்தார். அவர், 406 கனச்சதுர புதிரை தீர்த்திருந்தார்.
இந்நிலையில், கின்னஸ் சாதனை முயற்சியாக, ஸ்கேட்டிங் விளையாடிக்கொண்டே பாரத பிரதமர் மோடியின் படம் வரைவது, கண்ணைக் கட்டிக் கொண்டு, எதிர்திசையில் ஸ்கேட்டிங் விளையாடிபடி கனச்சதுர புதிருக்கு தீர்வுகாணுவது உள்ளிட்டவற்றில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். மேலும், சாதனைகள் செய்ய பயிற்சியாளர் மூலம் பயிற்சி பெற வேண்டியது அவசியம். ஆனால், போதிய வசதி இல்லை. தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.