அடிப்படை வசதிகளை வலியுறுத்தி தேர்தல் புறக்கணிப்பு !
திற்பரப்பு அருகே அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காததால் ஊர் மக்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக அறிவிப்பு தெரிவித்துள்ளனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-04-08 06:55 GMT
தேர்தல் புறக்கணிப்பு
கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு பஞ். 1ம் வார்டுக்கு உட்பட்ட பெரும் ஏலா பகுதியில் கடந்த பல வருடங்களுக்கு முன் பொதுமக்கள் முயற்சியில் பாதை அமைத்தனர். குறிப்பிட்ட பாதையை திற்பரப்பு சுற்றுலா பகுதியுடன் இனைத்து அணுகு சாலையாக பயன்படுத்த அதிகாரிகள் முயற்சி எடுத்தனர்.அமைச்சர் மனோதங்கராஜ் நேரில் ஆய்வு செய்து, திட்டத்தை உடனே நடை முறைப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆனால் ஆண்டுகள் கடந்தும் எந்த பணிகளும் நடக்கவில்லை.இதனால் பாதை பராமரிப்பு பணிகளும் நடக்காமல் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் தற்போது பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்து ஊரில் பதாகைகள் வைத்துள்ளனர்.