வக்பு வாரியத்துடன் இணைத்து செயல்படுத்த தமிழக அரசுக்கு கோரிக்கை..

அடிப்படை வசதிகளை அமைத்து தர வலியுறுத்தி தேர்தலை புறக்கணிக்க போவதாக பொதுமக்கள் அறிவிப்பு

Update: 2024-04-03 07:39 GMT

பொதுமக்கள் அறிவிப்பு

சேலம் மாநகரம் 44வது டிவிஷனுக்கு உட்பட்ட கரீம் காலனி பொதுமக்கள் அடிப்படை வசதிகளை அமைத்து தர வலியுறுத்தியும், இதுவரை பொதுமக்களுக்கு எந்த தேவைகளையும் நிறைவேற்றாத சேலம் முகமது புரா மதரஸாயே கரிமியா நிர்வாகத்தை கண்டித்து வரும் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்க போவதாக பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் முகமது புறா மதரஸாயே கரிமியா வக்பு நிலத்தில் குடியிருக்கும் வாடகைதாரர்களுக்கு இதுவரை அடிப்படை தேவைகளான குடிநீர், சாலை வசதி, சாக்கடை வசதி, தெருவிளக்கு, பொதுக் கழிப்பிடம் உள்ளிட்ட எந்த வசதியும் இந்த நிர்வாகத்தினர் செய்து தரவில்லை, எனவும் சேலம் மாநகராட்சி நிர்வாகம் செய்ய முன்வந்தாலும் செய்யவிடாமல் தடுத்து வாடகைதாரர்களை அடிமைகளாக, தீண்டத்தகாதவர்களாக நடத்துவதாகவும் குடியிருப்பு வாசிகள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். சேலம் முகமது புறா மதரஸாயே கரிமியா நிர்வாக குழுவினர் பதவியேற்று 5 ஆண்டுகள் கடந்தும் எந்த அடிப்படை வசதிகளையும் செய்து தராமல் மாணவர் ஆட்சி நிர்வாகத்தையும் செய்யவிடாமல் தடுத்ததன் காரணமாக 800 பேருக்கு மேல் உள்ள வாக்காளர்கள், 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். இது சம்பந்தமாக காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Tags:    

Similar News