கிளை சிறைக்கு ரூ. 75 ஆயிரத்தில் பொருட்கள் - ஈஸ்வரன் எம்.எல.ஏ வழங்கல்

75 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் கிளை சிறைக்கு திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் வழங்கினார்;

Update: 2023-12-27 13:13 GMT
திருச்செங்கோடு கிளை சிறைக்கு தேவையான மின் மோட்டார், கம்ப்ரஸர், பீரோ, புத்தக அலமாரி,என ரூ 75 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் வழங்கினார். அதனை சேலம் மத்திய சிறை கண்காணிப்பாளர் வினோத், கிளை சிறை கண்காணிப்பாளர் ராஜன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.நிகழ்ச்சியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் நதி ராஜவேல், மாவட்ட தலைவர் சேன்யோகுமார், அறங்காவலர் குழுத் தலைவர் தங்கமுத்து, சிக்க நாயக்கன் பாளையம் ஊராட்சி தலைவர் கோபால்,கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நகர செயலாளர் நகர்மன்ற உறுப்பினர் அசோக் குமார், நகர்மன்ற உறுப்பினர் சம்பூரணம், மற்றும் ஜெகதீஸ், கலை, பிரகாஷ், மூர்த்தி, சுரேந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News