பெண் மீது செங்கல் சூளை ஓனர் தாக்குதல்
திண்டுக்கல் அருகே பெண் மீது செங்கல் சூளை ஓனர் மற்றும் ரவுடிகள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.;
By : King 24x7 Angel
Update: 2024-02-13 09:26 GMT
பெண் மீது செங்கல் சூளை ஓனர் தாக்குதல்
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகில் நரிக்கல்பட்டிசேம்பரில், பழங்குடி இருளர் இனத்தைச் சேர்ந்தவர்கள் செங்கல் சூளையில் வேலை செய்து கொண்டிருந்தனர்.செங்கல் சூளை ஓனராலும் ரவுடிகளாலும் தாக்கப்பட்டனர். இவர்கள் பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொழிலாளர்கள் தற்சமயம் வரை இன்று வரை மிரட்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் ரேணுகா, இவரது கணவர் நாகப்பன், இவர்களுடன் ரேணுகாவின சித்தி மற்றும் சித்தப்பா அண்ணாமலை, முத்தம்மாள்இவருடன் தற்சமயம் அரசு மருத்துவமனையில் இருக்கிறார்கள்.