முறப்பநாடு அருகே கோவில் பூட்டை உடைத்து உண்டியல் பணம் திருட்டு
முறப்பநாடு அருகே கோவில் பூட்டை உடைத்து உண்டியல் பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ;
By : King 24X7 News (B)
Update: 2024-02-11 16:06 GMT
கோப்பு படம்
தூத்துக்குடி மாவட்டம், கலியாவூர் கிராமத்தில் கலுங்கடி சுடலைமாடசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் கோவில் பூட்டை உடை்து உள்ளே சென்று உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்றுவிட்டனர்.
இதுகுறித்து கோவில் தர்மகர்த்தா சிவராம கிருஷ்ணன் என்பவர் முறப்பநாடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.