வீட்டின் பூட்டை உடைத்து 5 சவரன் நகை கொள்ளை

திருப்பத்தூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 5 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2023-10-27 14:10 GMT

நகை கொள்ளை 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பூட்டிய வீட்டின் கதவை உடைத்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 5 சவரன் நகையை கொள்ளையடித்துச்சென்ற மர்மநபர் உமராபாத் காவல்துறையினர் விசாரணை.. திருப்பத்தூர் மாவட்டம்ஆம்பூர் அடுத்த கொத்தூர் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் கார் ஓட்டுரான இவருக்கு கெஜலட்சுமி என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ள நிலையில், சிவக்குமார் கடந்த ஒருவாரமாக கார் ஓட்டுநர் பணிக்கு சென்றிருந்த நிலையில் இவரது மனைவியும் தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.. பின்னர் இன்று காலை கெஜலட்சுமி வீடுதிரும்பிய போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டின் பீரோவின் கதவு உடைக்கப்பட்ட பீரோவில் வைத்திருந்த 5 சவரன் தங்கநகை மற்றும் உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.. பின்னர் கெஜலட்சுமி உடனடியாக இதுகுறித்து உமராபாத் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார் புகாரின் பேரில் காவல்துறையினர் இக்கொள்ளைச்சம்பவம் குறித்த வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்...
Tags:    

Similar News