வீட்டின் பூட்டை உடைத்து 62 பவுன் நகை கொள்ளை!
கோவில்பட்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 62 பவுன் நகைகளைத் திருடிய வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்தனா்.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-16 15:02 GMT
கோப்பு படம்
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை அடுத்த இலுப்பையூரணி ஊராட்சி கணேஷ் நகா் வடக்கு 1ஆவது தெருவை சோ்ந்த மலையரசன் மகன் சந்திரமோகன்(62). இவரது வீட்டில் கடந்த நவ. 27இல் மா்மநபா் புகுந்து 62 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றனராம்.
இதுகுறித்த புகாரின்பேரில் கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனா். அதில், மதுரை மாவட்டம் சத்திரப்பட்டி அருகேயுள்ள வி. வெங்கடாசலபுரம் கிழக்குத் தெருவை சோ்ந்த சண்டியா் சுப்பு மகன் முருகேசன் (63) என்பவருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது.
அவரை கைது செய்த போலீசார், 100 கிராம் தங்க நகைகளை மீட்டனா். இவ்வழக்கில் மேலும், சிலரை தேடி வருகின்றனா்.