போலி ஆவணம் தயாரித்த புரோக்கர் கைது

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டியில் போலி ஆவணம் தயாரித்த புரோக்கர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2024-06-27 10:54 GMT

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டியில் போலி ஆவணம் தயாரித்த புரோக்கர் கைது செய்யப்பட்டார்.


கன்னியாகுமரி மாவட்டத்தில் நிலம் தொடர்பான பத்திரம் தவறிவிட்டவர்கள் தொடர்பாக காவல் நிலையங்களில் வழங்குவது போல் போலியாக ஆவணம் தயார் செய்து பத்திரப்பதிவு அலுவலகங்களில் தாக்கல் செய்யப்படுவதாக புகார்கள் எழுந்து வந்தது. இந்த நிலையில் சமீபத்தில் கொட்டாரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் நிலம் ஒன்றின் பத்திரம் தவறிவிட்டதாக கூறி பூதப்பாண்டி போலீஸ் நிலையத்தில் ஆவணம்  பெறப்பட்டது போல் போலியாக போலீஸ் சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

Advertisement

இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இடம் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன் பெயரில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்த எஸ்பி உத்தரவிட்டார். பூதப்பாண்டி காவல் நிலைய எஸ் ஐ  லட்சுமணன் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை தொடங்கினார்.        

இதில் ராமமூர்த்தி என்பவரை நேற்று போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடந்த விசாரணை அடிப்படையில் மொத்தம் ஒன்பது பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ராமமூர்த்தி மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார். இரு பெண்களுக்கும் இதில் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.   இவர்களை பிடிக்க ஏ எஸ் பி தலைமையிலான இரண்டு தனிப்பட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன.

காவல் நிலைய முத்திரை எப்படி தயாரிக்கப்பட்டது?  காவல் நிலையத்தில் உள்ள போலீசார் இதற்க்கு உடந்தையாக இருந்தார்களா?  இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல காவல் நிலையங்களில் இது போன்று போலி முத்திரைகளை பயன்படுத்தி சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது.

Tags:    

Similar News