திருப்பூரில் உரிய ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ. 61,500 பறிமுதல்!
திருப்பூர் கணக்கம்பாளையம் பகுதியில் உரிய ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.61,500 தேர்தல்நிலை கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்தனர்.
By : King 24x7 Angel
Update: 2024-04-09 08:33 GMT
உரிய ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.61 ஆயிரத்து 500 பறிமுதல். திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் தேர்தல் நிலை கண்காணிப்பு அதிகாரிகள் தீவிர வாகன சோதனை ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் கணக்கம்பாளையம் பகுதியில் பறக்கும் படை அதிகாரி கௌரிசங்கர் தலைமையில் அதிகாரிகள் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த மனோஜ் குமார் என்பவர் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவரிடம் ரூ. 61 ஆயிரத்து 500 இருந்தது.
இதற்கான ஆவணங்கள் இல்லாததால் அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்து, திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் மகேஸ்வரனிடம் ஒப்படைத்தனர்.