வாலிபரை கடப்பாரையால் குத்திக் கொடூர கொலை - போலீசார் வழக்கு பதிவு

திருப்பூர் அனுப்பர்பாளையத்தில் வாலிபரை கடப்பாரையால் குத்தி கொடூர கொலை. கொலைகளை பிடிக்க 2 தனி படை அமைத்து தேடி வருகின்றன.

Update: 2024-02-20 11:21 GMT
திருப்பூர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர் அலெக்ஸ் மேத்தியுவ் (47). இவர் கேரளாவில் இருந்தபடி திருப்பூர் பனியன் கட்டிங் வேஸ்ட் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான வீடு திருப்பூர் பெரியார்காலனி ஏ.வி.பி. ஜே.எஸ். கார்டன் அருகே ஏ.டி.பி. லே-அவுட் 2-வது வீதியில் உள்ளது. நேற்று இரவு அந்த வீட்டு வளாகத்தில் வாலிபர் ஒருவர் ரத்தக்காயங்களுடன் சடலமாக கிடப்பதாக அனுப்பர்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் திருப்பூர் வடக்கு மாநகர போலீஸ் துணை கமிஷனர் ராஜராஜன், அனுப்பர்பாளையம் சரக உதவி கமிஷனர் நல்லசிவம், இன்ஸ்பெக்டர்கள் லதா, ஜெகநாதன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். தொடர்ந்து நடத்திய விசாரணையில் தலையில் கல்லால் தாக்கியும் கடப்பாரையால் குத்தி கொலை செய்திருப்பதும் தெரியவந்தது. பின்னர் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் சென்று தடயங்களை சேகரித்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தவர் திருப்பூரை அடுத்த மங்கலம் பகுதியை சேர்ந்த அசோக் (33) என்பது தெரிய வந்தது. மேலும் அவர் தனியார் செல்போன் நிறுவன விற்பனை பிரிவில் டீம் லீடராக பணியாற்றி வந்ததும் தெரிய வந்தது. நேற்று முன்தினம் இரவு அசோக் நண்பர்களுடன் அந்த வீட்டில் வைத்து மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி உள்ளனர். இதுதொடர்பாக அசோக்கின் நண்பரான ராஜா தியேட்டர் ரோடு அருகே பயர் சர்வீஸ் காலனியை சேர்ந்த ஆல்வின் (30), வினோத் (33) ஆகியோரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளை 2 தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News