உய்யவந்தி அய்யனார் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம்!

புதுக்கோட்டை மாவட்டம் உய்யவந்தி அய்யனார் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

Update: 2024-01-25 10:46 GMT
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே ஈழக்குடிப்பட்டி உய்யவந்தி அய்யனார் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அஇஅதிமுக சார்பில் மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 36 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. போட்டியானது பெரிய மாடு, சிறிய மாடு என இரு பிரிவுகளாக நடைபெற்றது. பெரிய மாட்டு வண்டி பிரிவில் 10 ஜோடி மாட்டு வண்டிகளும்,சிறிய மாட்டு வண்டி பிரிவில் 26 ஜோடி மாட்டு வண்டிகளும் கலந்து கொண்டன. பெரிய மாட்டு வண்டிக்கு கோனாபட்டு விளக்கு வரை போக வர 12 கிலோமீட்டர் தூரமும்,சிறிய மாட்டுவண்டிகளுக்கு துளையானூர் விலக்கு வரை 9 கிலோ மீட்டர் தூரமும் எல்லைகளாக நிர்ணயிக்கப்பட்டு போட்டி தொடங்கியது. போட்டியை திருமயம் அதிமுக ஒன்றிய பெருந்தலைவர் ராமு மற்றும் திருமயம் வடக்கு ஒன்றிய செயலாளர் பிஎல்ஆர்.பழனிவேலு ஆகியோர் தொடங்கி வைத்தனர். ஈழக்குடிப்பட்டியில் தொடங்கிய பந்தயத்தில் கலந்து கொண்ட மாட்டுவண்டி ஜோடிகள் மதுரை - புதுக்கோட்டை சாலையில் நான்கு கால் பாய்ச்சலில் சாலையில் துள்ளி குதித்து சீறிப்பாய்ந்து சென்றன. சீறிப்பாய்ந்து சென்ற மாட்டு வண்டி ஜோடிகளையும்,அதனை ஓட்டி வந்த சாரதிகளையும் சாலையின் இரு புறங்களிலும் நின்று ஏராளமான பொதுமக்கள் ஆரவாரத்துடன் கண்டுகளித்தனர். முதல் நான்கு இடங்களை பெற்ற மாட்டுவண்டி உரிமையாளர்களுக்கு ரொக்க பணம் மற்றும் கோப்பைகள் பரிசாக வழங்கப்பட்டன. பரிசுகளை அஇஅதிமுக மாவட்ட செயலாளர் பிகே.வைரமுத்து, ஒன்றிய பெருந்தலைவர் ஏ.எல்.ராமு, ஒன்றிய செயலாளர் பி எல் ஆர் பழனிவேலு, தொழிலதிபர் குமாரசாமி ஒன்றிய துணை பெருந்தலைவர் மீனாட்சிசிவகுமார், மாவட்ட கவுன்சிலர் மணிகண்டன்,மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் லட்சுமணன் மற்றும் அஇஅதிமுக கட்சி நிர்வாகிகள் வழங்கினர்.
Tags:    

Similar News