காரைக்குடியில் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம்

காரைக்குடியில் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.

Update: 2024-03-03 13:33 GMT

சீறிப்பாய்ந்த மாடுகள்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் கோவில் திருவிழாவை முன்னிட்டு, மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. இதில்,சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 55 ஜோடி மாடுகள் பங்கேற்றன.

காரைக்குடி கழனிவாசல் பகுதியில், திருச்சி - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற இப்போட்டியில் பெரிய மாட்டில் 21 ஜோடி மாடுகளும், சிறிய மாட்டில் 34 ஜோடி மாடுகளும் என மொத்தம் 55 ஜோடி மாடுகள் பங்கேற்றன.

பெரிய மாட்டிற்க்கு 8 மைல் தூரமும், சிறிய மாட்டிற்கு 6 மைல் தூரமும் பந்தய எல்லைகளாக நிர்ணயிக்கப்பட்டிருந்து. போட்டியில் வெற்றி பெற்ற பெரிய மாட்டின் உரிமையாளருக்கு 25 ஆயிரம் ரூபாயும், வெற்றி பெற்ற சிறிய மாட்டின் உரிமையாளருக்கு முதல் பரிசாக 15 ரூபாயும் ரொக்க பரிசாக வழங்கப்பட்டது.

Tags:    

Similar News