பள்ளி மாணவர்களுக்கான சீருடைகள் மூட்டை மூட்டையாக தீவைப்பு!
பள்ளி மாணவர்களின் சீருடைகள் மூட்டை மூட்டையாக தீவைப்பு மற்றும் கிணற்றில் வீச்சு - மாணவர்களின் பெற்றோர்கள் அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.;
பள்ளி மாணவர்களுக்கான சீருடைகள் மூட்டை மூட்டையாக தீவைப்பு!
பள்ளி மாணவர்களுக்கான சீருடைகள் மூட்டை மூட்டையாக தீவைப்பு!
புதுக்கோட்டை மாவட்டம் அருகே அக்கச்சிப்பட்டி இடுகாட்டில் அருகே உள்ள கிணற்றில் 2018 விருந்து 2022 ஆம் ஆண்டிற்கான பள்ளி மாணவர்களுக்கான சீருடைகள் மூட்டை மூட்டையாக குவிக்கப்பட்டு அவற்றை தீயிட்டு மர்ம நபர்கள் கொளுத்தி உள்ளனர். இதைக் கண்ட அவ்வழியாக சென்ற பொதுமக்கள் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர். அப்பொழுது மூட்டை மூட்டையாக கட்டப்பட்டு பள்ளி மாணவர்கள் சீருடைகள் 2018 மற்றும் 2022 ஆண்டிற்கான பள்ளி மாணவர்களின் சீருடைகள் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளன. இதை கண்ட பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் அப்பகுதியை சேர்ந்த கிராம பொதுமக்கள் பள்ளி மாணவர்களின் சீருடைகளை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் கிணற்றில் குவிக்கப்பட்ட பள்ளி மாணவர்களின் சீருடைகளை அந்தப் பகுதியை சேர்ந்த மாணவர்கள் எடுத்துச் சென்று வருகின்றனர். இவ்வாறு பள்ளி மாணவர்களின் சீருடைகளை மூட்டை மூட்டையாக கிணற்றில் வீசி தீயிட்டு கொளுத்திய நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.