தேவதானப்பட்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு
தேவதானப்பட்டி அருகே புள்ளகப்பட்டியில் பூட்டியிருந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பொருட்களை திருடி சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.;
Update: 2024-02-12 05:19 GMT
காவல் நிலையம்
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி புள்ளகப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் செல்லம்மாள் இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் பெரிய மகன் வெளிமாநிலத்தில் வசித்து வருகிறார் .நேற்று முன் தினம் செல்லம்மாள் தனது பெரிய மகன் வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார் இந்த நிலையில் நேற்று காலை வந்து பார்த்தபொழுது வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் வெள்ளி பொருட்கள் மற்றும் பணத்தை திருடி சென்றனர் .இது குறித்து தேவதானப்பட்டி காவல்துறையினர் விசாரணை வருகின்றனர்