விதிகளுக்கு உட்பட்டு பட்டாசுகளை வெடிக்க வேண்டும் - ஆட்சியர் அறிவுரை

Update: 2023-11-10 05:42 GMT

மாவட்ட ஆட்சியர் முருகேஷ்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தீபாவளிப் பண்டிகையின்போது பொதுமக்கள் பட்டாசுகளை மிகவும் பாதுகாப்புடன் வெடிக்க வேண்டும். மாணவ, மாணவிகள் பட்டாசுகளை கையாளும் போது மிகுந்த எச்சரிக்கையுடனும்பெற்றோர் மற்றும் மூத்தவர்களின் மேற்பார்வையிலும் கவனமாக வெடிக்க வேண்டும். பட்டாசு வெடிக்கும் இடத்தில் போதிய அளவில் தண்ணீர், மணல் ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும். எளிதில் தீப்பற்றக் கூடிய எண்ணெய், பெட்ரோல், பெயிண்ட் போன்ற பொருட்கள் வைத்திருக்கும் இடங்களில் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது.மின்சாதனங்கள், டிரான்ஸ்பார்மர்கள் ஆகியவற்றின் அருகில் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது, மருத்துவமனை, பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் எக்காரணம் கொண்டும் பட்டாசுகளை பொது மக்கள் வெடிக்கக் கூடாது, பேருந்து நிலையம், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பட்டாசுகளை வெடிக்க கூடாது, பட்டாசு சில்லரை விற்பனை கடை உரிமையாளர்கள் பட்டாசு கடைகளில் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்கள், கூட்ட நெரிசல்கள், பாதுகாப்பற்ற மின் சாதனப் பொருட்கள், அருகில் இருத்தல் ஆகியவை தவிர்க்கபடவேண்டியது என்பதை உறுதி செய்ய வேண்டும். பொது மக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். பொதுமக்கள் சுற்றுச் சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய பாதுகாப்புடன் மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் கேட்டுகொண்டுள்ளார்
Tags:    

Similar News