பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை கொண்டாடுங்கள்-ஆட்சியர் பேச்சு

25 ஆண்டுகளாக கிராம கணக்கில் பட்டா பதிவு செய்யாத நிலையில் தற்போது பட்டா வழங்கப்பட்டுள்ளதை பட்டாசு வெடித்து கொண்டாடுங்கள் என ஆட்சியர் கலைச்செல்வி பேசினார்.

Update: 2024-02-07 11:41 GMT

25 ஆண்டுகளாக கிராம கணக்கில் பட்டா பதிவு செய்யாத நிலையில் தற்போது பட்டா வழங்கப்பட்டுள்ளதை பட்டாசு வெடித்து கொண்டாடுங்கள் என ஆட்சியர் கலைச்செல்வி பேசினார்.

25 ஆண்டுகளாக கிராம கணக்கில் பட்டா பதிவு செய்யாத நிலையில் தற்போது பதிவு பட்டா வழங்கப்பட்டுள்ளதை பட்டாசு வெடித்து கொண்டாட வேண்டிய நிகழ்வு என மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி உத்திரமேரூரில் நடைபெற்ற பட்டா வழங்கும் விழாவில் பேசினார்.

காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பாக உத்திரமேரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் உள்ள 2249 நபர்களுக்கு கிராம கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்ட பட்டா வழங்கும் மாபெரும் விழா மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழக சிறு குறு மற்றும் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் , நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் கலந்துகொண்டு பட்டாக்களை வழங்கினர். விழாவில் பேசிய மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி , கடந்த 25 ஆண்டுகளாக பட்டா என்ற பெயரில் பெற்ற ஆவணங்கள் அரசு பதிவேட்டில் ஏற்றப்படாமல் இருந்தது பெருத்த ஏமாற்றம் அளிப்பதாக தெரியவந்தது.

ஆட்சியர் பதவி ஏற்ற உடன் அமைச்சர் தனக்கு கூறிய முதல் அறிவுரை பட்டா வழங்குவதை விட ஏற்கனவே பட்டா வழங்கிய நபர்களுக்கு அரசு பதிவேட்டில் பதிவு செய்து அவர்களுக்கு அதை அளிப்பது மிக முக்கியம் என தெரிவித்தார். அதன் அடிப்படையில் கடும் போராட்டத்திற்கு பின்பு அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்து தற்போது உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாலாஜாபாத் மற்றும் உத்திரமேரூர் பகுதிகளில் வசிக்கும் 2249 நபர்களுக்கு அரசு ஆவணங்களில் பதிவு செய்யப்பட்ட பட்டா ஆவணங்கள் வழங்கப்பட்டு வருகிறது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த இந்த அங்கீகாரத்தை பட்டாசு வெடித்து மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டிய நிகழ்வாக அனைவரும் என்ன வேண்டும் என தெரிவித்தவுடன் அனைவரும் கைத்தட்டி இதனை வரவேற்றனர்.

Tags:    

Similar News