புதிய வழிதடத்தில் பேருந்து சேவை : அமைச்சர் துவக்கி வைப்பு
தருவைக்குளத்தில் புதிய வழிதடத்தில் பேருந்து சேவையை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம, ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி தருவைகுளம், ஏஎம்.பட்டி, குமாரபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள், மாணவர்கள் மற்றும் அதிகாரிகள் அலுவல் நிமித்தமாக ஒட்டப்பிடாரம் வர வேண்டுமென்றால் பேருந்திற்க்காக தூத்துக்குடி செல்ல வேண்டும் இல்லையென்றால் எட்டையாபுரம்- மதுரை தேசிய நெடுஞ்சாலைக்கு சென்று ஒட்டப்பிடாரம் செல்லக்கூடிய பேருந்தில் தான் வரக்கூடிய சூழ்நிலை இருந்து வந்தது.
சுற்று வட்டார கிராம மக்கள் தருவைக்குளத்தில் இருந்து ஒட்டப்பிடாரம் செல்வதற்கு பேருந்து வசதி ஏற்ப்படுத்தி தர வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர். இது தாெடர்பாக சண்முகையா எம்.எல்.ஏ மேற்கொண்ட நடவடிக்கையால் தூத்துக்குடியில் இருந்து தருவைகுளம் ஏஎம்.பட்டி, குமாரபுரம், குறுக்குச்சாலை, ஒட்டப்பிடாரம், ஓசநூத்து, காமநாயக்கன்பட்டி வழியாக கோவில்பட்டி வரை செல்லக்கூடிய புதிய பேருந்து வழித்தடம் ஏற்ப்படுத்தப்பட்டது.
பொதுமக்களின் உற்சாக வரவேற்போடு புதிய வழித்தட பேருந்ததை தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர் ராதாகிருஷ்ணன், சண்முகையா எம்.எல்.ஏ ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் , மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ், ஓன்றிய செயலாளர் இளையராஜா, தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தூர்மணி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.