ஆட்டின் குரல் வளையை கடித்து அம்மனுக்கு நேர்த்திக்கடன்

சேலம் மாவட்டம், எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி பகுதியில் சக்தி காளியம்மன் கோவில் பூமிதி திருவிழாவில் ஆட்டின் குரல்வளையை கடித்து நேர்த்தி கடன் செலுத்தினர்.

Update: 2024-02-10 09:05 GMT

நேர்த்தி கடன்

சேலம் மாவட்டம், எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி அருகேயுள்ள குப்பனூர் பகுதியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு சக்தி காளியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. எடப்பாடியிலிருந்து பூலாம்பட்டி வழியாக மேட்டூர் பிரதான சாலையை ஒட்டி அமைந்துள்ள இக்கோவில் சுற்றுப்புற கிராமங்களில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். குப்பனூர் சக்தி காளியம்மன் திருக்கோவிலின் தீமிதி திருவிழா கடந்த 21 நாட்களுக்கு முன் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.

தொடர்ந்து சுவாமி திருவீதி உலா, சிறப்பு அபிஷேகம், யாக பூஜைகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான தீ மிதிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பெரும் திரளான பொதுமக்கள் தீக்குண்டத்தில் இறங்கி வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். முன்னதாக விரதம் இருந்த பக்தர்கள் புலி வேடம் அணிந்து கோவிலை வளம் வந்து கோவிலின் முன் உயிருள்ள ஆட்டின் குரல் வலையை கடித்து ரத்த அபிஷேகம் செய்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மேலும் பொய்க்கால் குதிரை ஆட்டம் போன்ற வினோத நிகழ்ச்சியை காண மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பொதுமக்கள் திரண்டு இருந்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை குப்பனூர் சக்தி காளியம்மன் கோவில் நிர்வாக குழுவினர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

Tags:    

Similar News