திருமண விழாக்கள் ரத்து!

கனமழையால் நெல்லை, தூத்துக்குடியில் ஆங்காங்கே பல திருமண மண்டபங்களில் தண்ணீர் புகுந்ததால், பல திருமணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Update: 2023-12-21 14:37 GMT

கனமழையால் நெல்லை, தூத்துக்குடியில் ஆங்காங்கே பல திருமண மண்டபங்களில் தண்ணீர் புகுந்ததால், பல திருமணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பொதுவாக மார்கழி மாதத்தில் இந்துக்கள் திருமண விழாக்களை நடத்துவது இல்லை. அதேவேளையில் கிறிஸ்தவர்களுக்கு இந்த கட்டுப்பாடு கிடையாது. இதன்காரணமாக கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்கள் டிசம்பர் மாதத்தில் திருமண விழா நடத்த ஏற்பாடு செய்திருந்தனர். கனமழையால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள பல திருமண மண்டபங்களில் வெள்ளநீர் புகுந்ததால் இம்மாவட்டங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பல திருமண விழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.  செல்போன் சிக்னல் கிடைக்காத காரணத்தால் திருமண விழா ரத்து செய்யப்பட்ட விவரத்தை செல்போன் மூலம் உறவினர்களுக்கு தெரிவிக்க முடியாத நிலைக்கு திருமண வீட்டார் தள்ளப்பட்டு உள்ளனர். அதேவேளையில் தொடர்பு கொள்ள முடிந்த உறவினர்கள் மூலம் மற்ற உறவினர்களுக்கும் இந்த தகவலை தெரிவிக்க திருமண வீட்டார் அறிவுறுத்தி உள்ளனர். திருமணத்தையொட்டி மணமகளுக்கு சீர்வரிசை கொடுப்பதற்காக பெற்றோர் தங்களது வீட்டில் வாங்கி வைத்திருந்த கட்டில், பீரோ மற்றும் மின்சாதனப் பொருட்களும் வெள்ள நீரில் சேதம் அடைந்துள்ளது. இதனால் திருமண வீட்டார் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News