சண்முகா மருத்துவமனையில் புற்றுநோய் விழிப்புணர்வு
சண்முகா மருத்துவமனையில் உலக புற்றுநோய் தினத்தையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.;
By : King 24x7 Angel
Update: 2024-02-05 07:38 GMT
சண்முகா மருத்துவமனையில் புற்றுநோய் விழிப்புணர்வு
சேலம் சாரதா காலேஜ் ரோட்டில் உள்ள சண்முகா மருத்துவமனையில் உலக புற்றுநோய் தினத்தையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதாவது, புற்றுநோய் விழிப்புணர்வு குறித்த ஓவியம், கட்டுரை மற்றும் கலாசார போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில் பல்வேறு மாநிலங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதில் மக்கள், விளையாட்டு துறை, பண்டிகை மற்றும் விழா காலங்கள் குறித்த ஓவியம் ஆகியவற்றில் சிறந்ததாக தேர்வு செய்யப்பட்டது. 18 பேருக்கும் ரூ.1 லட்சம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு மருத்துவமனை நிர்வாக இயக்குனர் பிரபு சங்கர் தலைமை தாங்கினார். சண்முகா குழும நிறுவன தலைவர் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். சேலம் போலீஸ் துணை கமிஷனர் மதிவாணன் கலந்து கொண்டு போட்டியில் தேர்வானவர்களுக்கு பரிசு, சான்றிதழை வழங்கி புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு கருத்துக்களை எடுத்துரைத்தார். நிகழ்ச்சியில் மருத்துவமனை இயக்குனர் பிரியதர்ஷினி, முதன்மை செயல்பாட்டு அதிகாரி அந்துவன் சாம்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.