சேலத்தில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பேரணி
உலகப் புற்றுநோய் தினத்தை முன்னிட்டு சேலத்தில் நடந்த விழிப்புணர்வு பேரணியை மாநகர காவல் துறை துணை கமிஷனர் மதிவாணன் தொடங்கி வைத்தார்.
Update: 2024-02-05 06:52 GMT
சேலத்தில் உள்ள விநாயகா கார்கினோஸ் புற்றுநோய் சிகிச்சை மையம் சார்பில் உலகப் புற்றுநோய் தினத்தை முன்னிட்டு புற்றுநோய் தடுப்பது மற்றும் முன்கூட்டியே கண்டறிதல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபயணம் பேரணி நடந்தது. இந்த பேரணி விம்ஸ் மருத்துவமனை ஸ்பெஷாலிட்டி கிளினிக்கில் இருந்து தொடங்கியது. இதை தெற்கு போலீஸ் துணை கமிஷனர் மதிவாணன் தொடங்கி வைத்தார். விம்ஸ மருத்துவ மருத்துவமனை இயக்குனர் டாக்டர் மீனாட்சி சுந்தரம், துணை மருத்துவ இயக்குனர் டாக்டர் அசோக் ராஜ்குமார், கார்கினோஸ் ஹெல்த் கேர் மருத்துவ இயக்குனர் டாக்டர் பால்செபாஸ்டியன், அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் டீன் டாக்டர் செந்தில்குமார், புற்று நோயியல் நிபுணர்கள், டாக்டர்கள் கலந்து கொண்டனர். புற்று நோயை எதிர்த்து போராடும் சமூகம் சார்ந்த முன் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபடுவதன் மூலம் ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவதற்கான அதன் நோக்கத்திற்காக இந்த நிறுவனம் செயல்படுகிறது என டாக்டர்கள் தெரிவித்தனர்.