திண்டுக்கல்லில் வீடு குடி பெயர்ந்துள்ள வேட்பாளர்
திண்டுக்கல்லில் சட்ட விரோத செயல்களை தடுத்து நிறுத்த தான் திண்டுக்கல்லில் வீடு குடி பெயர்ந்துள்ளேன் என பாமக மாநில பொருளாளர் கவிஞர். திலகபாமா பேட்டி அளித்தார்.
Update: 2024-05-23 00:34 GMT
தமிழக பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொருளாலரும் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியின் வேட்பாளராக போட்டியிட்ட திலகபாமா திண்டுக்கல்லில் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் தெரிவிக்கையில்..தமிழகத்தில் தற்போது சட்டம் ஒழுங்கு சீர்கேட்டு விட்டது எங்கு பார்த்தாலும் கஞ்சா ,போதைப் பொருள் விற்பனை தாராளமாக விற்பனையாகிறது. சந்து சந்துக்கு மது விற்பனை நடைபெறுகிறது. தற்போது சில்லிங் என்ற பெயரில் அனைத்து பகுதிகளிலும் மதுபானம் மற்றும் போதை பொருள் கஞ்சா விற்பனையானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4ம் தேதிக்கு பிறகு போதை பொருளை விற்பனை தடுக்கும் வகையிலும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து வரும் தமிழக அரசை கண்டித்தும் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றார்.