வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி

நாமக்கல்லில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-04-10 08:44 GMT

சின்னம் பொருத்தும் பணி

நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், சங்ககிரி பேரூராட்சி, சங்ககிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, இராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களில் நாமக்கல் மக்களவை பொது தேர்தலில் வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளின் முன்னிலையில் நடைபெற்று வருவதை இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மக்களவைப் பொதுத் தேர்தல் 2024-க்கான வாக்குப்பதிவு வருகின்ற 19.04.2024 (வெள்ளிக்கிழமை) அன்று நடைபெற உள்ளது.

மக்களவைப் பொதுத் தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ள வேட்பாளர்கள் 20.03.2024 முதல் 27.03.2024 வரை தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். அந்த வகையில், நாமக்கல் மக்களவைத் தொகுதியில் 40 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவில் பயன்படுத்துவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (Ballot Unit), கட்டுப்பாட்டுக் கருவிகள் (Control Unit), வாக்கினை சரிபார்க்கும் கருவிகள் (VVPAT) ஆகியவை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளின் முன்னிலையில் தொடர்புடைய சட்டமன்ற தொகுதியில் உள்ள பாதுகாப்பு அறையில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட சங்ககிரி சட்டமன்ற தொகுதியில் 312 வாக்குச்சாவடிகளுக்கும், இராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் 261 வாக்குச்சாவடிகளுக்கும், சேந்தமங்கலம் தெற்கு சட்டமன்ற தொகுதியில் 284 வாக்குச்சாவடிகளுக்கும், நாமக்கல் சட்டமன்ற தொகுதியில் 289 வாக்குச்சாவடிகளுக்கும், பரமத்தி-வேலூர் சட்டமன்ற தொகுதியில் 254 வாக்குச்சாவடிகளுக்கும் மற்றும் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியில் 261 வாக்குச்சாவடிகளுக்கும் என மொத்தம் நாமக்கல் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட 1,661 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி இன்றையதினம் தொடங்கப்பட்டுள்ளது.

வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணிகள் நிறைவடைந்த பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் சி.சி.டிவி கேமிரா பொருத்தப்பட்டுள்ள பாதுகாப்பு வைப்பு அறையில் மீண்டும் வைத்து பூட்டி சீல் வைக்கப்படும். வாக்குப்பதிவின் போது தொடர்புடைய வாக்குச்சாவடி மையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்துச் செல்லப்படும்.

Tags:    

Similar News