நாய் தொல்லை... தாங்க முடியலை!

புதுக்கோட்டையில் ஆங்காங்கே தெருநாய்களின் தொல்லை அதிகரித்திருப்பதால், பொதுமக்கள் அச்சத்துடன் பாதையை கடக்க வேண்டியுள்ளது.

Update: 2023-12-28 02:54 GMT

புதுக்கோட்டையில் ஆங்காங்கே தெருநாய்களின் தொல்லை அதிகரித்திருப்பதால், பொதுமக்கள் அச்சத்துடன் பாதையை கடக்க வேண்டியுள்ளது. 

புதுக்கோட்டை நகராட்சியில் 42 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் அதிக அளவில் தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்வோர், நடந்து செல்வோரை இந்த நாய்கள் துரத்தி கடிக்க முயற்சிக்கின்றன. இதனால் பெண்கள்,சிறுவர்கள் சாலையில் நடந்து செல்ல அஞ்சுகின்றனர். நாய்கள் துரத்துவதால் வாகனங்களில் செல்வோர் கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். நாய்த் தொல்லை காரணமாக அதிகாலையில் நடைபயிற்சி, ஓட்டப்பயிற்சி மேற்கொள்வோரும் அச்சத்துட னேயே சென்று வருகின்றனர். தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருவது தொடர்பாக நகராட்சி கூட்டங்களில் கவுன்சிலர்கள் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தெருநாய்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும், வெறிநாய்க ளுக்கு தடுப்பூசி செலுத்தவும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News