காரும்,காரும் நேருக்கு-நேர் மோதி விபத்து - இருவர் காயம்.

Update: 2023-11-26 03:00 GMT

சிந்தாமணிப்பட்டி காவல் நிலையம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா, தேவர்மலை பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி ,45. இவர் கடந்த 23ஆம் தேதி மதியம் 12 மணியளவில் பாளையத்திலிருந்து சுண்டுக்குழிபட்டி சாலையில் அவரது காரில் சென்று கொண்டிருந்தார். இவரது கார் வெரலிப்பட்டி நால்ரோடு அருகே வந்த போது, எதிர் திசையில் கடவூர் தாலுக்கா, வெரலிப்பட்டி பகுதியைச் சேர்ந்த செல்வராஜ், 46, என்பவர் வேகமாக ஓட்டி வந்த கார், பாலாஜி ஓட்டி சென்ற கார் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இரண்டு பேருக்கும் காயங்கள் ஏற்பட்டதால், உடனடியாக அவர்களை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மயிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய பாலாஜி, இது தொடர்பாக சிந்தாமணிப்பட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், காரை வேகமாக ஓட்டி விபத்து ஏற்படுத்திய செல்வராஜ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Tags:    

Similar News