டூவீலர் மீது கார் மோதி விபத்து - ஒருவர் படுகாயம்

Update: 2023-11-12 10:29 GMT

மாயனுர் காவல் நிலையம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம், போசம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கணபதி (32).இவர் நேற்று காலை 9 மணி அளவில் கரூர்- திருச்சி சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டிருந்தார். இவரது வாகனம் திருக்காம்புலியூர் புற்றுக்கோவில் அருகே வந்த போது, அதே சாலையில் வேகமாக வந்த கார்,டூவீலரின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வாகனத்துடன் கீழே விழுந்த கணபதிக்கு, வலது கால் மற்றும் இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்தசம்பவம் குறித்து மாயனூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags:    

Similar News