தொழில் போட்டி - ஒருவரை ஒருவரை தாக்கிக் கொண்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள்.

Update: 2023-11-17 05:55 GMT

தொழில் போட்டியால் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்குள் மோதல்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

 விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. இந்த மருத்துவமனைக்கு விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நோயாளிகள் வருகை தந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். நோயாளிகள் அரசு மற்றும் தனியார் ஆம்புலன்ஸ்களில் சிகிச்சைக்கு அழைத்து வரப்படுகின்றனர் நோயாளிகள் சிகிச்சை முடிந்து இல்லம் திரும்பவும் அல்லது மேல் சிகிச்சைக்காக மதுரை,திருநெல்வேலி அல்லது பிற மாவட்டங்களுக்கு அழைத்துச் செல்வதற்கு அரசு ஆம்புலன்ஸை தொடர்பு கொள்ளும் போது பெரும்பாலான நேரங்களில் இலவச ஆம்புலன்ஸ் சேவை தட்டுப்பாடு ஏற்படுகிறது அதன் காரணமாக தங்களின் அவசர தேவைக்கு நோயாளிகள் தனியார் ஆம்புலன்ஸ் சேவையை தேடிச் செல்கின்றனர். இந்த நிலையில் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட தனியார் ஆம்புலன்ஸ்கள் செயல்பட்டு வருகின்றனர். இவர்களுக்கிடையே நோயாளிகளை சிகிச்சைக்கு அழைத்துச் செல்வதில் தொழில் போட்டி நிலவி வருகிறது .இந்த தொழில் போட்டி காரணமாக நேற்று இரவு விருதுநகர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை நுழைவு வாயிலில் தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் இருவர் நோயாளிகளை தங்கள் ஆம்புலன்ஸ் தான் சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் எனக் கூறி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. மாவட்ட நிர்வாகமும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகமும் உடனடியாக தலையிட்டு தனியார் ஆம்புலன்ஸ் செயல்பாட்டை முறைப்படுத்தினால் மட்டுமே இந்த தொழில் போட்டி குறையும்.இது போன்ற பிரச்சனைகள் இருந்து விடுபட முடியும் என்ற நிலை உருவாகி உள்ளது.

Tags:    

Similar News