சரக்கு லாரி கவிழ்ந்து தனியாா் காவலாளி பலி
விபத்து குறித்து காவல்துறயினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்;
Update: 2023-12-08 05:53 GMT
சரக்கு வாகனம் கவிழ்ந்து காவலாளி பலி
தூத்துக்குடியில் இருந்து 500 உர மூட்டைகளுடன் லாரி ஒன்று கடலூா் புறப்பட்டது. இந்நிலையில், திருச்சி சஞ்சீவி நகா் பேருந்து நிறுத்தம் அருகே வியாழக்கிழமை அதிகாலை வந்த லாரி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், உர மூட்டைகளின் இடிபாடுகளுக்குள் ஒருவா் சிக்கி உயிரிழந்திருப்பது பின்னா் தெரியவந்தது. லாரி ஓட்டுநா் அா்ஜுன் (35) காயமின்றி உயிா் தப்பினாா். இவ்விபத்து குறித்து தகவலறிந்த திருச்சி வடக்கு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனா். மேலும் போலீஸாா் விசாரணையில், உயிரிழந்தவா் திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் காமராஜா் காலனியைச் சோ்ந்த முருகேசன் (60) என்பதும், சஞ்சீவி நகா் பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் இரவுநேரக் காவலாளியாகப் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. இறந்தவரின் சடலத்தை போலீஸாா் மீட்டு திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். விபத்து குறித்து, போலீஸாா் வழக்குப் பதிந்து லாரி ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.