குமாரபாளையம் அருகே பெண்ணை தாக்கியதாக 4பேர் மீது வழக்கு
குமாரபாளையம் அருகில் பெண்ணை தாக்கியதாக பெண்கள் மூவர் உள்ளிட்ட நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.;
காவல் நிலையம்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே ஹபெண்ணை தாக்கியதாக பெண்கள் மூவர் உள்ளிட்ட நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட வழக்கில் நால்வர் தலைமறைவானார்கள்.
குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம், ஆயிக்கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் புவனேஸ்வரி, 33. இவர் தனது கணவரின் சித்தி சிவகாமி வசம், வீட்டு தேவைக்காக 2021ம் வருடம், 20 ஆயிரம் கடன் வாங்கி, வட்டியும் செலுத்தி வருகிறார். ஜூன் 6ல் தனது மாமியார் பவளாயி வசம் வீட்டு செலவிற்காக பணம் கேட்டு சென்ற போது, பவளாயி மற்றும் புவனேஸ்வரிக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது.
இது குறித்து பவளாயி, சிவகாமி வசம் கூறி, கொடுத்த பணத்தை திரும்ப கேள், என தூண்டி விட்டதாக கூறப்படுகிறது. இதனால், சிவகாமி, அவரது மகள் ரேவதி, உறவினர் ராஜசேகர், பவளாயி ஆகியோர், புவனேஸ்வரி மற்றும் அவரது கணவர் சதீஷ்குமார் ஆகியோரை, ஜூன் 9ல் தகாத வார்த்தையில் பேசியும், கல்லால், செருப்பால், கைகளால் அடித்து துன்புறுத்தியதுடன்,
ராஜசேகர் புவனேஸ்வரியின் நைட்டியை கிழித்தும் மானபங்கம் செய்ததாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து குமாரபாளையம் போலீசில் புவனேஸ்வரி புகார் செய்ய, போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான பவளாயி, சிவகாமி, ரேவதி, ராஜசேகர் ஆகிய நால்வரை தேடி வருகின்றனர்.