கடனை திருப்பித் தராமல் ஏமாற்றியவர் மீது வழக்கு

கள்ளக்குறிச்சியில் கடனை திருப்பித் தராமல் ஏமாற்றியவர் மீது வழக்கு.

Update: 2024-04-16 01:46 GMT

காவல்துறை விசாரணை


கள்ளக்குறிச்சியில் தொழில் அபிவிருத்திக்காக கடன் பெற்று, அதை திருப்பி தராமல் ஏமாற்றியவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். கள்ளக்குறிச்சி அடுத்த அரியபெருமானுாரைச் சேர்ந்தவர் கதிரவன், 45; விவசாயி. இவர், கடந்த ஜனவரி மாதம் 31ம் தேதி கள்ளக்குறிச்சி கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் என்பவருக்கு 15 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் கடனாக கொடுத்துள்ளார். செல்வகுமார் தனது நகைக்கடையை அபிவிருத்தி செய்வதற்காக வாங்கிய கடனை, கதிரவன் பலமுறை கேட்டும் பணத்தை தராமல் ஏமாற்றியுள்ளார். இது குறித்து கதிரவன் அளித்த புகாரின் பேரில், செல்வகுமார் மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
Tags:    

Similar News