தேர்தல் விதிமுறைகளை மீறி சுவர் விளம்பரம் செய்தவர்கள் மீது வழக்கு
தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் விதிமுறைகளை மீறி சுவர் விளம்பரம் செய்த நபர்களின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Update: 2024-03-28 05:10 GMT
தர்மபுரியில் தேர்தல் அறிவிப்பு வெளியானதை அடுத்து, நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. தேர்தல் நடத்தை விதிகளின்படி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதியில், பொது இடங்கள் மற்றும் தனியார் இடங்கள் ஆகியவற்றில் உரிய அனுமதியின்றி விளம்பரம் செய்தல், போஸ்டர் ஒட்டுதல், சுவரில் எழுதுதல் தடை செய்யப்பட்டுள்ளது. கிராமப் புறங்களில் தனியார் கட்டிடங்களில் தேர்தல் விளம்பரங்கள் செய்வதற்கு, சம்மந்தப்பட்ட கட்டிடத்தின் உரிமையாளர் அனுமதி அளிக்கும் பட்சத்தில், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் விளம்பரம் செய்யலாம்.
இந்நிலையில்,தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி, அனுமதியின்றி சுவர் விளம்பரம் செய்த 14 பேர் மீது, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.