கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு
உத்தமபாளையம் அருகே முன்விரோதத்தால் ஒருவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.;
Update: 2024-01-04 02:27 GMT
காவல் நிலையம்
உத்தமபாளையம் கா.புதுப்பட்டி பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவருக்கும் முத்துக்குமார் என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த டிசம்பர் 31ஆம் தேதி முத்துக்குமார் கண்ணனை வழிமறித்து கையில் வைத்திருந்த இரும்பு குழாய் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். காயமடைந்த கண்ணன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் .உத்தமபாளையம் காவல்துறையினர் முத்துக்குமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்