உறவினர் வீட்டில் செயின் திருட்டு இருவர் மீது வழக்கு
மயிலாடுதுறை அருகே கொற்கை கிராமத்தில் குளிப்பதற்கு கழட்டி வைத்து சென்ற செயினை திருடிய உறவினர்கள் மீது போலீசார் திருட்டு வழக்குப் பதிவு விசாரணை செய்து வருகின்றனர்.;
Update: 2024-05-15 10:24 GMT
மயிலாடுதுறை அருகே கொற்கை கிராமத்தில் குளிப்பதற்கு கழட்டி வைத்து சென்ற செயினை திருடிய உறவினர்கள் மீது போலீசார் திருட்டு வழக்குப் பதிவு விசாரணை செய்து வருகின்றனர்.
மயிலாடுதுறை அருகே கொற்கை அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன் மனைவி செண்பகவல்லி இவர் நேற்று முன்தினம் மாலை கொல்லைபுரத்தில் குளிக்க செல்லும் பொழுது தன் 3 பவுன் செயினை வீட்டில் கழட்டி வைத்துவிட்டு சென்றுள்ளார். அந்த நேரத்தில் அவரது அக்கா பேரன் சந்தோஷ் மற்றும் அவரது நண்பர் ராஜேஷ் ஆகியோர் வந்திருந்தனர். இவர் குளித்து முடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார் சிறிது நேரம் சிறிது நேரம் கழித்து செயின் கழட்டி வைத்திருந்த இடத்தில் பார்த்தபோது அந்த செயினை காணவில்லை. இது குறித்து அவர் மணல்மேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார், தன் வீட்டிற்கு வந்த உறவினரான சந்தோஷ் மற்றும் அவர் நண்பர் சேந்தங்குடியை சேர்ந்த ராஜேஷ் ஆகியோர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். மணல்மேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து இரு நபர்களையும் தேடி வருகின்றனர்.