மேட்டூருக்கு ஊர்வலமாக சென்ற விவசாயிகள் 70பேர் மீது வழக்கு
காவிரி உபரிநீரை பெற்றுத்தர வலியுறுத்தி மேட்டூருக்கு ஊர்வலமாக சென்ற விவசாயிகள் 70 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.;
By : King 24X7 News (B)
Update: 2024-06-13 15:46 GMT
ஊர்வலமாக சென்ற விவசாய சங்கத்தினர்
கர்நாடகாவில் இருந்து உபரிநீரை பெற்று தர வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தினர் பூம்புகார் முதல் மேட்டூர் அணை வரை ஊர்வலமாக சென்றனர்.
நேற்று முன்தினம் இரவு சேலம் வந்த தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் தலைமையிலான இந்த குழுவினருக்கு விவசாயிகள் வரவேற்பு அளித்தனர்.
இந்த நிலையில் அனுமதி இல்லாமல் ஊர்வலமாக சென்றதாக பி.ஆர்.பாண்டியன் உள்பட விவசாயிகள் 70 பேர் மீது சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.