தொழிலாளியின் மீது ஆட்டோ மோதியவர் மீது வழக்கு
திருச்சி அருகே தொழிலாளி மீது ஆட்டோவால் மோதியவர் மீது வழக்குபதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Update: 2024-02-18 07:40 GMT
திருச்சி, அரியமங்கலம் உக்கடை பகுதியை சேர்ந்தவர் சரவணகுமார். இவரது மனைவியை காணவில்லை என அரியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இது குறித்து போலீசார் சூர்யா என்பவரை விசாரணை செய்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர் சாலையில் நடந்து சென்ற சரவணகுமார் மீது ஆட்டோ வால் மோதியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் சூர்யா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.