உறவினர் வீட்டில் பொருட்களை சேதப்படுத்தியவர் மீது வழக்கு பதிவு

சி.மோட்டுபட்டி கிராமத்தில் உறவினர் வீட்டில் பொருட்களை சேதப்படுத்திய நபர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-03-20 04:21 GMT

வழக்கு பதிவு 

தர்மபுரி மாவட்டம், அரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் அருகே உள்ள சி.மோட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வடிவேல் விவசாயி. இவருடைய மனைவி விஜயா, இதற்கிடையே வடிவேல் சொந்த வேலை காரணமாக தர்மபுரிக்கு வந்தார். மீண்டும் வீட்டிற்கு திரும்பி சென்றபோது வீட்டில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் உடைத்து சேதப்படுத்தப்பட்டிருந்தன.

இதனால் அதிர்ச்சி அடைந்த வடிவேல் இதுகுறித்து மனைவியிடம் கேட்டார். அதே கிராமத்தைச் சேர்ந்த இவருடைய உறவினரான சந்தோஷ் குமார் என்பவர் வடிவேலின் வீட்டிற்கு வந்து அங்கிருந்த பொருட்களை உடைத்து சேதப்படுத்திய தாகவும் அதை தடுக்க முயன்ற விஜயாவை கீழே தள்ளி மிரட்டல் விடுத்ததாகவும் அந்த பகுதியில் இருந்தவர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக வடிவேல் கிருஷ்ணாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News