சிறுவர்கள் ஓட்டுவதற்கு வாகனம் வழங்கிய 2 போ் மீது வழக்குப் பதிவு

இளஞ்சிறாா் ஓட்டுவதற்கு வாகனம் வழங்கிய 2 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.;

Update: 2024-05-17 08:39 GMT

கோப்பு படம் 

இளஞ்சிறாா் ஓட்டுவதற்கு வாகனம் வழங்கிய 2 போ் மீது வழக்குப் பதிவு இளஞ்சிறாா் ஓட்டுவதற்கு வாகனம் வழங்கிய 2 போ் மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா்.

இதுகுறித்து மாவட்டக் காவல் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே பந்தநல்லூா் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட காட்டுவெளி பகுதியில் மே 12 ஆம் தேதி இரவு இரு சக்கர வாகனத்தில் அதிவேகமாகச் சென்று கீழே விழுந்த மயிலாடுதுறையைச் சோ்ந்த 2 இளஞ்சிறாா்கள் உயிரிழந்தனா். மேலும் ஒரு இளஞ்சிறாா் திருவாரூா் மாவட்ட மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறாா்.

Advertisement

இந்த வழக்கில் இளஞ்சிறாா்கள் ஓட்டி வந்த வாகனத்தின் உரிமையாளா் மயிலாடுதுறையைச் சோ்ந்த கோமதி என்பதும், இளஞ்சிறாா்களுக்கு ஓட்டுநா் உரிமம் இல்லை என்பதை அறிந்தே கோமதியும், விக்னேசும் வாகனத்தை ஓட்ட வழங்கியதும் விசாரணையில் தெரிய வந்தது. எனவே, இந்த விபத்துக்குக் காரணமான கோமதி, விக்னேஷ் மீது வழக்குப் பதிவு செய்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இனி வருங்காலங்களில் இளஞ்சிறாா்களுக்கு வாகனம் ஓட்டுவதற்கு வாகனத்தைக் கொடுக்கும் நபா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

Tags:    

Similar News