ஊட்டியில் தங்கும் விடுதி மேலாளர் மீது வழக்கு பதிவு

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை குறித்து தாமதமாக தகவல் அளித்த தங்கும் விடுதி மேலாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2024-05-25 15:36 GMT

கோப்பு படம் 

ஐரோப்பிய நாடுகளை ஒத்த காலநிலை நிலவுவதால், இந்திய மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவில் நீலகிரி மாவட்டத்தை ரசிக்க வந்து செல்கின்றனர். வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வந்தால், குறைந்தது 3 நாட்கள் முதல் ஒரு வாரம் வரை தங்கி இருந்து பல்வேறு இடங்களையும் பார்த்து ரசித்து செல்கின்றனர்.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நீலகிரியில் உள்ள தங்கும் விடுதிகள் மற்றும் காட்டேஜ்களில் தங்கினால் அதுகுறித்து தனியாக பதிவேடுகள் பராமரித்து 24 மணி நேரத்திற்குள் காவல் நிலையம் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

இந்நிலையில் ஊட்டி பாம்பே கேசில் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் கடந்த மாதம் வெளிநாட்டை சேர்ந்த 15 சுற்றுலா பயணிகள் வந்து 10 நாட்கள் தங்கி இருந்து பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்தனர். ஆனால் இது குறித்து தங்கும் விடுதி நிர்வாகத்தினர் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கவில்லை. 

ஆனால் போலீஸாரின் திடீர் சோதனையில் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் தங்கியிருந்தது தெரியவந்தது இதைத் தொடர்ந்து விடுதி மேலாளர் விக்னேஷ் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை குறித்து தகவல் தெரிவிக்க விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

Similar News