வாட்ஸ் ஆப்பில் அவதூறு பரப்பியவர் மீது வழக்குப்பதிவு
வாட்ஸ் ஆப் குரூப்பில் மற்றொருவர் குடும்பத்தினர் குறித்து அவதூறு செய்தியை பரப்பியவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Update: 2024-05-05 05:43 GMT
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை எஸ் பி கே காலேஜ் ரோடு சேர்ந்தவர் சுதாகர் வயது 69.இவருடைய குடும்பத்தைப் பற்றி அருப்புக்கோட்டையைச் சார்ந்த சிவக்குமார் என்பவர் வாட்ஸ் ஆப் குரூப்பில் செய்திகளை பரப்பி வந்ததாக கூறப்படுகிறது இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி சுதாகர் அளித்த புகாரின் அடிப்படையில் சிவக்குமார் மீது அருப்புக்கோட்டை டவுன் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.