மனைவி,குழந்தைக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவன் மீது வழக்கு பதிவு
சிவகாசி அருகே மனைவி, குழந்தையை எரித்து கொன்று விடுவதாக கணவன் மிரட்டல்.போலீஸ் விசாரணை.
Update: 2024-03-26 09:38 GMT
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் கருப்பசாமிநகரை சேர்ந்தவர் பாரத்சிவா (22).இவர் அதே பகுதியை சேர்ந்த சுப்புலட்சுமி என்பவரை 2 ஆண்டுகளுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தியாஸ்ரீ என்ற 9 மாத பெண் குழந்தை உள்ளது.பாரத்சிவா அடிக்கடி குடித்துவிட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.சம்பவத்தன்று கணவன்,மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது பாரத்சிவா தனது டூவீலரில் இருந்த பெட்ரோல் கேனை எடுத்து காட்டி நான் திரும்பி வரும் போது நீ இங்கிருந்தால் உன்னையும், குழந்தையையும் உயிரோடு எரித்து கொன்று விடுவேன் என்று கொலைமிரட்டல் விடுத்துள்ளார்.இது குறித்து மனைவி கொடுத்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீசார் வழக்குபதிவு செய்து கணவனிடம் விசாரணணை நடத்தி வருகின்றனர்.